Ledger7

What's newஎன்ன புதுசு

Every update to Ledger7, newest first. We ship most weeks — usually because a builder asked for it. Ledger7-ல வர்ற ஒவ்வொரு update-ம், புதுசு முதல்ல. கிட்டத்தட்ட எல்லா வாரமும் ஏதாவது வரும் — பெரும்பாலும் ஒரு builder கேட்டதால.

August 2026ஆகஸ்ட் 2026
Newபுதுசு

Export everything from a siteஒரு சைட்டோட எல்லாத்தையும் export பண்ணுங்க

Every entry as a spreadsheet or a printed PDF — or a single ZIP that also carries the bill photos and files you uploaded. It's in the share button at the top of any site. ஒவ்வொரு பதிவையும் spreadsheet-ஆ அல்லது print PDF-ஆ எடுக்கலாம் — இல்லைனா நீங்க upload பண்ண bill photo, file எல்லாத்தையும் சேர்த்து ஒரே ZIP-ஆ. சைட் மேலே இருக்கிற share பட்டன்-ல இருக்கு.

Betterமேம்பாடு

Deleting a site now tells you exactly what goesசைட்டை delete பண்ணும்போது என்ன அழியும்னு தெளிவா தெரியும்

It counts the entries, bill photos, files and attendance days it is about to erase, and offers to export them first. You are never forced to — it just makes sure you know. எத்தனை பதிவு, bill photo, file, வருகை நாள் அழியப்போகுதுன்னு எண்ணி காட்டும், முதல்ல export பண்ணிக்கவும் கேட்கும். கட்டாயம் இல்ல — தெரிஞ்சு முடிவு பண்ணுங்க, அவ்ளோதான்.

Betterமேம்பாடு

Client payments show even without stagesStage இல்லாட்டியும் client payment தெரியும்

If you have not set up project stages, the Milestones tab no longer shows ₹0. It shows what the client has actually paid against the project value, and how much is still to collect. Stage set பண்ணலைன்னா, Milestones tab இனிமே ₹0 காட்டாது. Client எவ்ளோ கொடுத்திருக்காரு, project மதிப்புல இன்னும் எவ்ளோ வாங்கணும்னு காட்டும்.

Betterமேம்பாடு

A more complete GST returnஇன்னும் முழுமையான GST return

6-digit HSN codes where your turnover needs them, and the supplier's GSTIN now reaches the return from your supplier master even when it was not typed on the entry. உங்க turnover-க்கு தேவைப்பட்டா 6-இலக்க HSN code, மேலும் entry-ல type பண்ணலைன்னாலும் supplier master-ல இருந்து GSTIN return-ல வந்துடும்.

Betterமேம்பாடு

Suppliers and contractors grouped by siteSupplier, contractor சைட் வாரியா

Each site now shows the suppliers and contractors you have actually used there, so you are not scrolling past every party in your account. Search still covers everything. ஒவ்வொரு சைட்டுலயும் நீங்க அங்க பயன்படுத்துன supplier, contractor மட்டும் தெரியும் — எல்லா பேரையும் scroll பண்ண வேணாம். தேடினா எல்லாமே வரும்.

Newபுதுசு

A proper view for your accountantஉங்க accountant-க்கு தனி view

Your CA gets a read-only desktop table of your books, and can raise a question against a party instead of editing anything. Your ledger stays yours. உங்க CA-க்கு படிக்க மட்டும் முடிஞ்ச desktop table. ஏதாவது சந்தேகம்னா அந்த party மேல கேள்வி பதிவு பண்ணலாம் — எதையும் மாத்த முடியாது. உங்க கணக்கு உங்ககிட்டயே.

Newபுதுசு

Material stock for every siteஒவ்வொரு சைட்டுக்கும் material stock

Record what came in and what got used, and see what is still lying on site. Cement, steel, sand — the things that quietly walk away. என்ன வந்துச்சு, என்ன செலவாச்சு பதிவு பண்ணுங்க — சைட்ல இன்னும் என்ன இருக்குன்னு தெரியும். சிமெண்ட், கம்பி, மணல் — சத்தமில்லாம காணாம போறவை.

Betterமேம்பாடு

Cash on hand, on the home screenகையில இருக்க பணம், முகப்புலயே

One number for the money you actually control right now, with what is owed out shown beneath it — instead of a row of totals that never quite answered the question. இப்ப நிஜமா உங்க கையில இருக்க பணம் ஒரே எண்ணா, அதுக்கு கீழ கொடுக்க வேண்டியது — கேள்விக்கு பதில் சொல்லாத total வரிசைக்கு பதிலா.

Newபுதுசு

Reports, all in one placeReport எல்லாம் ஒரே இடத்துல

Material usage and stage tracking now sit together under More, instead of being scattered through the app. Material usage, stage tracking ரெண்டும் இப்ப "மேலும்"-ல ஒண்ணா இருக்கு — app முழுக்க தேட வேணாம்.

July 2026ஜூலை 2026
Newபுதுசு

Attendance under a team leaderமேஸ்திரி கீழ வருகை

Mark a labour contractor's crew under his name, and his Saturday payout is worked out separately from your own direct workers. கூலி ஒப்பந்தக்காரரோட ஆட்களை அவரு பேர்ல பதிவு பண்ணுங்க — அவரோட சனிக்கிழமை கூலி உங்க சொந்த ஆட்களுக்கு தனியா கணக்கு வரும்.

Newபுதுசு

Bill-wise purchases for suppliersSupplier purchase bill வாரியா

Purchases group under the supplier's bill number, so a supplier statement matches the paper he handed you. Supplier-ஓட bill number-படி purchase தொகுக்கப்படும் — அவரு கொடுத்த பேப்பரோட statement சரியா பொருந்தும்.

Betterமேம்பாடு

Overtime set once, for the whole accountOT ஒரே தடவை set பண்ணா போதும்

Choose how you pay overtime — by shift, by hour, or a flat amount — and it applies everywhere, including for your supervisors. You can still change it on a single row. OT எப்படி கொடுக்கிறீங்க — ஷிப்ட், மணி, அல்லது நேரடி தொகை — ஒரு தடவை தேர்ந்தெடுங்க, எல்லா இடத்துலயும், உங்க மேற்பார்வையாளர்களுக்கும் பொருந்தும். ஒரு வரிக்கு மட்டும் வேணும்னா மாத்திக்கலாம்.

Betterமேம்பாடு

Your own lists are editableஉங்க பட்டியலை நீங்களே மாத்தலாம்

Worker roles, trades and materials you added are yours to rename or remove — and adding a new one straight from the picker now saves it properly. நீங்க சேர்த்த வேலை, தொழில், material எல்லாம் நீங்களே பேர் மாத்தலாம், நீக்கலாம் — picker-ல இருந்து புதுசா சேர்த்தா இப்ப சரியா சேமிக்கப்படும்.

Betterமேம்பாடு

Petty cash with real datesPetty cash-க்கு சரியான தேதி

Money handed to a supervisor now carries the date it was actually given, and an entry recorded wrongly can be corrected instead of living with the mistake. மேற்பார்வையாளருக்கு கொடுத்த பணத்துக்கு நிஜ தேதி பதிவாகும், தப்பா பதிஞ்சத திருத்தவும் முடியும்.

Newபுதுசு

Studio plan now covers up to 30 sitesStudio plan இப்ப 30 சைட் வரை

The largest plan was raised from 20 sites to 30, at the same steps, for builders running more than we first planned for. பெரிய plan 20 சைட்-ல இருந்து 30 ஆ உயர்த்தப்பட்டது — நாங்க நினைச்சதை விட அதிக சைட் நடத்தற builders-க்காக.

June 2026ஜூன் 2026
Newபுதுசு

The app was rebuiltApp முழுசா மறுபடி கட்டப்பட்டது

Faster to open, lighter on a cheap phone, and a real layout on a laptop instead of a stretched mobile screen. சீக்கிரம் திறக்கும், சாதாரண போன்-லயும் லேசா ஓடும், laptop-ல இழுத்த mobile screen இல்லாம சரியான layout.

Newபுதுசு

It works without signalSignal இல்லாட்டியும் வேலை செய்யும்

Log attendance and expenses on site with no network. Entries queue on the phone and upload themselves the moment you are back in range. சைட்ல network இல்லாட்டியும் வருகை, செலவு பதிவு பண்ணலாம். போன்ல காத்திருக்கும், signal வந்ததும் தானா upload ஆகும்.

Newபுதுசு

Saturday payout, by nameசனிக்கிழமை கூலி, பேர் வாரியா

Each worker's wages worked out for the week with any advance already deducted, plus printable challans you can get signed on site. ஒவ்வொரு ஆளுக்கும் வாரக் கூலி, கொடுத்த முன்பணம் கழிச்சு. சைட்ல கையொப்பம் வாங்க அச்சிடக்கூடிய சலான்களும் உண்டு.

Newபுதுசு

Supplier dues, contractor bills, client milestonesSupplier நிலுவை, contractor bill, client milestone

Three sides of the money in one place — what you owe suppliers, what you owe contractors, and what the client still owes you. பணத்தோட மூணு பக்கமும் ஒரே இடத்துல — supplier-க்கு கொடுக்க வேண்டியது, contractor-க்கு கொடுக்க வேண்டியது, client கிட்ட வாங்க வேண்டியது.

Betterமேம்பாடு

Half days and overtime that match how you payஅரை நாள், OT — நீங்க கொடுக்கிற மாதிரியே

Mark half a day as half a day, and record overtime as extra hours or a flat amount, whichever way you actually settle it. அரை நாளை அரை நாளாவே பதியுங்க. OT-யை கூடுதல் மணியாகவோ நேரடி தொகையாகவோ — நீங்க எப்படி கொடுக்கிறீங்களோ அப்படியே.

Fixedசரி செய்யப்பட்டது

Entries no longer double up on a weak signalSignal குறைவா இருந்தா பதிவு இரட்டிக்காது

If the network dropped while an entry was saving, it could save twice — or not at all. Both are fixed. Every entry now carries its own identity, so a retry can never become a second entry. சேமிக்கும்போது network போயிட்டா, பதிவு ரெண்டு தடவை சேமிக்கப்படலாம் — இல்லைனா சேமிக்காமலே போகலாம். ரெண்டும் சரி செய்யப்பட்டுடுச்சு. ஒவ்வொரு பதிவுக்கும் தனி அடையாளம் இருக்கு, மறுபடி முயற்சி பண்ணா ரெண்டாவது பதிவா ஆகாது.

Ledger7 is built for Tamil Nadu construction firms — attendance, materials, GST and client payments in one app, in Tamil. Ledger7 தமிழ்நாட்டு கட்டுமான நிறுவனங்களுக்காக — வருகை, material, GST, client payment எல்லாம் ஒரே app-ல, தமிழ்ல.

See plans →Plan-களை பாருங்க →
← Back to ledger7.com← ledger7.com-க்கு திரும்பு